close
Choose your channels

நயன்தாராவின் அடுத்த படத்தை தயாரிக்கும் சூப்பர் ஸ்டாரின் மேனேஜர்?

Saturday, February 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'ஐரா' திரைப்படம் வரும் மார்ச் 28ஆம் தேதியும், சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா நடித்த 'Mr.லோக்கல்' திரைப்படம் வரும் மே 1ஆம் தேதியும் வெளியாகவுள்ளது என்பது தெரிந்ததே. மேலும்
நயன்தாரா தற்போது 'தளபதி 63', 'கொலையுதிர்க்காலம், 'சயிர நரசிம்மரெட்டி, லவ் ஆக்சன் டிராமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நயன்தாரா நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. நயன்தாராவின் புதிய படத்தை வேல்மதி என்பவர் இயக்கவுள்ளாராம். இவர் ஸ்ரேயா ரெட்டி நடித்த 'அண்டாவ காணோம்' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மேனேஜர் குமார் என்பவர் தயாரிக்கவிருப்பதாகவும், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.