close
Choose your channels

ரசிகர்களின் மோசமான கமெண்ட்ஸ்-க்கு தரமான பதிலடி கொடுத்த நீலிமா ராணி!

Monday, January 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்பட மற்றும் சீரியல் நடிகை நீலிமா ராணி குழந்தை நட்சத்திரம் முதல் நடித்து வருகிறார் என்பதும் தேவர் மகன்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்து அதன் பிறகு மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நீலிமா ராணிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார். அவை மிகப் பெரிய அளவில் வைரலாகும்.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை பாலோ செய்யும் ரசிகர்களில் சிலர் மோசமான கமெண்ட்ஸ் பதிவு செய்யும் நிலையில் அவ்வப்போது அதிரடியாக அதற்கு பதிலடி கொடுத்து வருவார். அவருடைய தைரியமான பதிவுகள் பல வைரல் ஆனது என்பதே.

இந்த நிலையில் தற்போது அவர் தன்னையும் தனது குடும்பத்தையும் பற்றி மோசமாக விமர்சனம் செய்யும் நபர்களை வரிசையாக பிளாக் செய்துள்ளார். மேலும் அவர் யார் யாரை எல்லாம் பிளாக் செய்துள்ளார் என்பது குறித்த பட்டியலையும் ஒரு வீடியோவாக வெளியிட்டு அவர்களை மற்றவர்களுக்கும் அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்த பதிவில் அவர், ‘ நம்மைச் சுற்றி எதிர்மறையாக சிந்திக்கும் நபர்களை எல்லாம் கடந்து விட்டு செல்வது தான் நமக்கு நல்லது, அவர்களை பிளாக் செய்து விட்டேன், என தனது இன்ஸ்டாகிராமில் கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இதனையடுத்து மோசமாக கமெண்ட் செய்தவர்களுக்கு அவர் தரமான பதிலடி கொடுத்துள்ளார் என நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.