close
Choose your channels

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த ரஜினி, அஜித், விஜய் பட பிரபலம்!

Wednesday, April 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் அவர் தற்போது 'இரும்புத்திரை' இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹீரோ' படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை அடுத்து இயக்குனர்கள் பாண்டியராஜ், விக்னேஷ் சிவன், நெல்சன் ஆகியோர்களின் இயக்கத்தில் உருவாகும் படங்களில் சிவகார்த்திகேயன் வரிசையாக நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே ரஜினியின் '2.0', அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை', விஜய்யின் 'தலைவா', உள்பட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.