close
Choose your channels

பறந்து செனற பறவை மீண்டும் இறைதேடி வீட்டிற்குள்.. பிக்பாஸில் இன்று ஒரு வைல்ட்கார்ட்?

Sunday, October 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது என்பது இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டன்,ஆயிஷா, ராம் ராமசாமி, குயின்ஸி, விஜே கதிரவன், மெட்லி ஒலி சாந்தி, ஷிவின் கணேஷன், தனலட்சுமி, விஜே மகேஷ்வரி, அமுதவாணன், விக்ரமன், ஜனனி, மாடல் நிவாஷினி, அசர் கோளார் ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மைனா நந்தினி நிச்சயம் கலந்து கொள்வார் என யூகிக்கப்பட்ட அனைத்து பட்டியலில் அவரது பெயர் இருந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு காரணமாக அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போனதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் முன்னிலையில் மைனா நந்தினி வைல்ட் கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜிபி முத்து, ஜனனி, தனலட்சுமி ,சாந்தி, மகேஸ்வரி ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில் மைனாவின் எண்ட்ரியால் பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அதிக பிரபலமில்லை என்றாலும் நன்றாக ஹோம்வொர்க் செய்து போட்டிக்கு தயார் நிலையில் வந்துள்ளதால், தங்களை முன்னிறுத்திக் கொள்ள பல விஷயங்களை செய்து வருகின்றனர். இந்த நிலையில் மைனாவின் வரவு பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரசியத்தை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மைனா நந்தினி கலந்து கொள்வதை ட்விட்டர் பயனாளர் இமாத் தனது டுவிட்டரில், ‘பறந்து சென்ற பறவை மீண்டும் இறைதேடி வீட்டிற்குள்’ என பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.