close
Choose your channels

ஓவியாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Friday, November 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழர்களின் மனதில் இடம்பிடித்த ஓவியா, தற்போது 'காஞ்சனா 3', '96ml', சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்' மற்றும் களவாணி 2' ஆகிய நான்கு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்துமே கிட்டத்தட்ட முடியுந்தருவாயில் இருப்பதால் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரிலீஸ் ஆகும் ஓவியாவின் முதல் படம் என்ற பெருமையை 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' படம் பெற்றுள்ளது. ஆம் இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தேதியில் தனுஷின் 'மாரி 2', 'விஜய்சேதுபதியின் 'சீதக்காதி', 'சிவகார்த்திகேயனின் 'கனா' உள்பட ஒருசில படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு, ஓவியா, ரெஜினா, யோகிபாபு, ஆனந்தராஜ், கருணாகரன், லிவிங்ஸ்டன், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளர். லியோன் ஜேம்ஸ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை விஷ்ணுவின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.