close
Choose your channels

'பரிதாபங்கள்' கோபி வீட்டுக்கு வந்த தேவதை.. ரசிகர்கள் வாழ்த்து..!

Friday, June 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’பரிதாபங்கள்’ என்ற யூடியூப் சேனலை சுதாகர் மற்றும் கோபி ஆகிய இருவரும் காமெடியாக நடத்தி வருகின்றனர் என்பதும் அவர்களுடைய காமெடி வீடியோவுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு என்பது தெரிந்ததே.

மேலும் யூடியூப் மட்டுமின்றி ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த ‘மீசையை முறுக்கு’ என்ற திரைப்படத்தில் கோபி மற்றும் சுதாகர் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பரிதாபங்கள் கோபிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது என்பதும் யமுனா என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார் என்பது. இவர்களது திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது பரிதாபங்கள் கோபி தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் தெரிவித்துள்ளார். ’தகப்பனானேன்.. அழகான மகள் பிறந்துள்ளார்’ என்று பதிவு செய்துள்ளதை அடுத்து பரிதாபங்கள் கோபிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பரிதாபங்கள் சுதாகருக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.