close
Choose your channels

தளபதி 62' படத்தில் இணைந்த பிரபல அரசியல்வாதி

Sunday, March 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி 62 படத்தில் இணைந்த பிரபல அரசியல்வாதி

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். விரைவில் 'தளபதி 62' படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு அமெரிக்காவுக்கு அசெல்லவுள்ளனர்

இந்த நிலையில் 'தளபதி 62' படத்தில் மூன்று வில்லன்கள் என்றும், அவர்களில் ஒருவர் ராதாரவி என்றும், மற்றொருவர் பிரபல அரசியல்வாதி பழ.கருப்பையா என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே பழ.கருப்பையா, 'அங்காடித்தெரு' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு வில்லன் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

விஜய், கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதும் இந்த படத்தை பிரமாண்டமான பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.