close
Choose your channels

விஜய்சேதுபதியை முந்தும் சசிகுமார்!

Tuesday, July 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாகவிருப்பதாகவும் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கவுள்ளதாகவும் ஏற்கனவே ஒரு செய்தி வெளியானது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளும் சில நாட்கள் நடந்தது. இந்த நிலையில் விஜய்சேதுபதி ஏற்கனவே கமிட் ஆன படங்களை முடித்துவிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு வர இன்னும் ஒருசில மாதங்கள் ஆகும் என தெரிகிறது

இதனையடுத்து இந்த இடைவெளியில் இயக்குனர் பொன்ராம் ஒரு குறுகிய கால திரைப்படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாகவும் இந்த படத்தின் ஹீரோவாக சசிகுமார் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் கதையை கேட்டு ஓகே சொன்ன சசிகுமார் உடனே படப்பிடிப்புக்கும் தயாராகிவிட்டாராம்

கிராமத்து காதல், காமெடி அம்சங்கள் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் தொடங்கி டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து பொன்ராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச்சில் தொடங்கும் என கூறப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.