close
Choose your channels

வெண்மையில் ஜொலிக்கும் மாஸ்டர் பட நாயகி… வைரல் புகைப்படம்!!!

Saturday, January 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெண்மையில் ஜொலிக்கும் மாஸ்டர் பட நாயகி… வைரல் புகைப்படம்!!!

 

பூக்கள் என்றாலே மென்மைதான். அதுவும் வெள்ளைநிற பூக்கள் இன்னும் அதிகமான தூய்மையையும் அமைதியையும் சேர்த்து கொடுக்கும். அப்படி ஒரு வெண்மையான மலரைச் சூடிக்கொண்டு அதற்கேற்ற ஒரு வெண்மை நிறம் கலந்த உடையில் மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் காட்சி அளிக்கிறார். இந்தப் புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடும் வைரலாகி வருகிறது.

தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் கதாநாயகியாக தளபதியுடன் ஜோடி போட்டோர். இதனால் முன்னணி நடிகை வரிசைக்கு உயர்ந்த இவர் படம் வெளிவருவதற்கு முன்பே பல லட்சக்கணக்கான ரசிகர்களையும் சம்பாதித்து இருக்கிறார். இந்தப் படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. கொரோனாவால் கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு இப்படம் முதல் முறையாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாளவிகா மோகனன் தனது சமூக வலைத்தளப் பதிவில் மாஸ்பட போஸ்டரை பதிவிட்டு அதோடு முகக்கவசம் குறித்த விழிப்புணர்வு வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். மேலும் சோஷியல் மீடியாவில் படு பிசியாக இருந்து வரும் இவர் தொடர்ந்து தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் வெண்மைநிற லுக் ரசிகர்களை மேலும் ஈர்த்து இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.