close
Choose your channels

பிரியதர்ஷனின் அடுத்த படத்தில் 'விஸ்வரூபம்' நாயகி

Sunday, October 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷன் இந்த ஆண்டு உதயநிதி நடித்த 'நிமிர்' மற்றும் பிரகாஷ்ராஜ் நடித்த 'சம்டைம்ஸ்' ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது ஒரு மலையாள படத்தை இயக்கி வரும் அவர் 'தி இன்விசிபிள் மாஸ்க்' என்ற இன்னொரு திரைப்படத்தையும் இயக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் பூஜா குமார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்' படத்தின் இரண்டு பாகங்களிலும் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் பூஜாகுமார் ஒரு நடுத்தர குடும்பத்து பெண்மணியாகவும், திருமணம் செய்யாமல் தனது குடும்பத்திற்காக உழைக்கும் ஒரு கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.