close
Choose your channels

விஷ்ணு தான் எல்லாத்துக்கும் காரணம்.. கமல் முன் போட்டு உடைக்கும் பூர்ணிமா..!

Sunday, December 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 70 வது நாளாக நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய அடுத்த ப்ரோமோவில் உங்கள் வெற்றிக்கு தடையாக இருக்கும் போட்டியாளர் யார் என கமல்ஹாசன் கேட்க அதற்கு ஒவ்வொருவராக பதில் சொல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது.

முதல் கட்டமாக எனது வெற்றிக்கு தடையாக இருப்பது அர்ச்சனா என விக்ரம் சரவணன் கூறுகிறார்.. இதனை அடுத்து நிக்சன் ‘எனது வெற்றிக்கு தடை எனது கோபம் தான்’ என்று கூற ’வேறு யாரும் இல்லையா’ என்று கமல்ஹாசன் கேட்க ’கோபத்தை வர வைக்கணும் என்று தூண்டுகிற தினேஷ், அர்ச்சனா ஆகிய இரண்டு பேர் தான்’ என்று கூறுகிறார்.

இதனை அடுத்து அனன்யா எழுந்து ’தினேஷ் மிகவும் மோசமாக பேசுகிறார், அடுத்தவரை இழிவுபடுத்தும் வகையில் பேசுகிறார்’ என்று குறை கூறி தனது வெற்றிக்கு தினேஷ் தடையாக இருப்பதாக தெரிவித்தார், இதனை அடுத்து மாயா எழுந்து ’அர்ச்சனா’ என்று கூறுகிறார். இதையடுத்து அர்ச்சனா எழுந்தபோது ’என்னுடைய வெற்றிக்கு தடையாக இருப்பது நான் தான்’ என்று அவர் தன்னைத்தானே குறை கூறுகிறார்.

விஷ்ணுவும் தனது கோபம் தான் வெற்றிக்கு தடையாக இருப்பதாக கூற பூர்ணிமா தனது வெற்றிக்கு தடை விஷ்ணு என்று கூறுகிறார். விஷ்ணு அதைக் கேட்டு அதிர்ச்சி அடைவதுடன் இன்றைய ப்ரோமோ வீடியோ முடிவு வருகிறது. மொத்தத்தில் இந்த விவகாரம் அடுத்த வாரம் பேசு பொருளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.