close
Choose your channels

சன்னிலியோனை அடுத்து இந்திய திரையுலகில் மேலும் ஒரு ஆபாச நடிகை

Tuesday, October 31, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கனடாவில் ஆபாச நடிகையாக புகழ்பெற்ற சன்னிலியோன் தற்போது பாலிவுட் திரையுலகை கலக்கி வரும் நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு ஆபாச இணையதளங்களில் நம்பர் ஒன் இடத்தை பெற்ற மியா காலிஃபாவும் தற்போது இந்திய திரையுலகில் வலம் வரவுள்ளார். லெபனான் நாட்டை சேர்ந்த இவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆபாச நடிகையாக விளங்கியவர். தற்போது வெப்மாடலாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த உமர் லுலு இயக்கிய Chunkzz என்ற மலையாள அடல்ட் காமெடி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் உமர் விரைவில் தொடங்கவுள்ளார்.

முதல் பாகத்தில் நடித்த ஹனிரோஸ், பாலுவர்கீஸ் நாயகன், நாயகியாக மீண்டும் நடிக்கவுள்ள நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஆபாச நடிகை மியா காஃபியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஒருவேளை மியாகாலிஃபா இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றால் வேறொரு ஆபாச நடிகையை அணுக படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

வரும் 2018 மே மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படத்தை பிரபல பாலிவுட் நிறுவனம் ஒன்று தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.