close
Choose your channels

அதுக்கு தான் கணிக்கவே முடியாத பைத்தியக்காரனை கூட்டிட்டு வந்திருக்கேன்: 'சலார்' டிரைலர்

Monday, December 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபாஸ் நடித்த ‘சலார்’ திரைப்படம் உலகம் முழுவதும் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த ட்ரைலரில் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது என்பதும் குறிப்பாக பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் ஆக்சன் காட்சிகள் இருப்பதை பார்த்து ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

பிரபாஸ், பிரிதிவிராஜன், ஸ்ருதிஹாசன், டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி, கருடா ராம் உட்பட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படத்தை ’கேஜிஎஃப்’ படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். ரவி பஸ்ரூர் இசையில் உருவான இந்த படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகி உள்ளது என்பது ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது

’சின்ன வயசுல உனக்கு ஒரு கதையை நான் சொல்லிக்கிட்டே இருப்பேன், பாரசீக சாம்ராஜ்யத்தின் சுல்தான் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும், தன்னோட பலமான படைகள் கிட்ட கூட சொல்லாம, ஒருத்தன் கிட்ட தான் சொல்லுவான்’ என்ற வசனத்துடன் இந்த படத்தின் டிரைலர் ஆரம்பமாகிறது.

சுல்தானுக்கு தேவையான எல்லாத்தையும் அவன் கொண்டு வந்தான், தேவையில்லாத எல்லாத்தையும் துவம்சம் செஞ்சிருவான். அவன் கிட்ட கால்குலேட்டர் வச்சு எந்த கணக்கையும் கணிக்க முடியாது , அதுக்கு தான் கணிக்கவே முடியாத ஒரு பைத்தியக்காரனை கூட்டிட்டு வந்து இருக்கேன், அவன் பேரு ‘சலார்’ என்ற வசனத்துடன் டிரைலர் முடிவுக்கு வருகிறது.

மிகப்பெரிய பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.