close
Choose your channels

பிரபுதேவா-தமன்னாவின் 'தேவி' ரிலீஸ் தேதி

Tuesday, July 26, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட்டில் நடன இயக்குனர், இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வந்த பிரபுதேவா கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் சென்று முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கினார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கோலிவுட் திரும்பிய அவர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'தேவி (எல்) என்ற படத்தில் நடித்து வந்தார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நெருங்கிவிட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படம் செப்டம்பர் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
பிரபுதேவா, தமன்னா, சோனு சூட், மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தில் எமிஜாக்சன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை பிரபுதேவா தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.