close
Choose your channels

உன்னை ஆர்ட்டிஸ்ட்டா நினைச்சேன் பாரு, என்னை செருப்பால அடிக்கணும்.. நிக்சனுக்கு பதிலடி கொடுத்த ப்ரதீப்..!

Wednesday, October 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நிக்சன் மற்றும் பிரதீப் இடையே மோதல் ஏற்பட்ட காட்சிகள் இன்றைய முதல் புரோமோவில் வெளியானது என்பதை பார்த்தோம். நிக்சன் ஆவேசமாக தனக்கு இந்த போட்டியில் கலந்து கொள்ள தகுதி இல்லை என்று எப்படி கூறலாம் என ப்ரதீபை பார்த்து கூறிய காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில் நிக்சனுக்கு பதிலடி தரும் வகையில் ப்ரதீப் கூறும் காட்சிகள் இன்றைய இரண்டாவது புரமோவில் வெளியாகியுள்ளன. தகுதி இல்லை என்பதை எப்படி சொன்னேன் என்றால், என்ன பத்தி குறை சொல்வதற்கு எவனுக்கும் தகுதி இல்லை என்ற அர்த்தத்தில் சொன்னேன். உன்னை குற்றம் சொல்லி நான் என்னடா பண்ண போறேன்

நீ சொல்கிறாய் அல்லவா ஒரு ஆர்டிஸ்ட் என்று, என் உரிமை குரல் எடுத்து நான் கத்தி பாடுவேன் என்று சொல்லுகிறாய் அல்லவா, அப்படியென்றால் நீ ஹீரோ தானே, நான் ஹீரோ இல்லையென்று சொன்னால் என்ன அர்த்தம். உன்னையெல்லாம் ஆர்ட்டிஸ்ட் என்று நினைத்த என்னை தான் செருப்பால் அடிக்கணும் என்று ஆவேசமாக கூறுகிறார். இதனால் நிக்சன் மிகவும் சோர்வடைகிறார்.

மொத்தத்தில் ப்ரதீப் - நிக்சன் வாக்குவாதம் இன்றைய நிகழ்ச்சியில் பிரதானமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.