close
Choose your channels

வடிவேலு காமெடி வீடியோவை பதிவு செய்து நன்றி சொன்ன பிரதீப்.. குவியும் வாழ்த்துக்கள்..!

Monday, November 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்பட்ட பிரதீப் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் வடிவேலு காமெடி வீடியோவை பதிவு செய்து ’எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார். பிரதீப் ஆண்டனி அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும், எல்லை மீறி செயல்பட்டதாகவும் அவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து பிக் பாஸ் நிர்வாகம் பிரதீப் ஆண்டனியை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விட்டது. அவருடைய வெளியேற்றத்திற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரதீப் ஆண்டனி தனது சமூக வலைத்தளத்தில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். வடிவேலு காமெடி வீடியோவை ஒன்றை பதிவு செய்த அவர், சமூக வலைதளங்களில் தனக்கு கிடைத்த ஆதரவுக்கு மிகவும் நன்றி, கூட நின்றதற்கு நன்றி, என்னால முடிஞ்ச அளவுக்கு நல்ல நடிகராக முயற்சி செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டைட்டில் பட்டம் பெற தகுதியான போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் கண்டிப்பாக திரையுலகில் அவர் ஜொலிப்பார் என்று நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.