close
Choose your channels

அரசியல்வாதியை மணக்கிறார் பிரியங்கா சோப்ரா சகோதரி.. நிச்சயதார்த்த புகைப்படங்கள்..!

Sunday, May 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரியும் நடிகையுமான பரினீதி சோப்ராவின் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்த நிலையில் அது குறித்து புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் பரினீதி சோப்ரா. அவர் டெல்லியில் ஆளுங்கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் எம்பி ராகவ் என்பவரை கடந்த சில மாதங்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில் தற்போது ராகவ்-பரினீதி சோப்ரா நிச்சயதார்த்தம் நடந்தது.

டெல்லி நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில் பிரியங்கா சோப்ரா உள்பட முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்களை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது சகோதரிக்கும் சகோதரியின் வருங்கால கணவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகவ்-பரினீதி திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

நடிகை பரினீதி சோப்ரா தற்போது இரண்டு ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.