close
Choose your channels

'ராட்சசன்' ராம்குமாரின் அடுத்த பட ஹீரோ இந்த பிரபலமா? ரசிகர்கள் ஆச்சரியம்!

Sunday, July 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2018 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம்’ ராட்சசன்’. இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் 8 கோடியில் தயாரான இந்தப் படம் மொத்தம் 50 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் ‘ராட்சசன்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த போதிலும் இயக்குனர் ராம் குமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நான்கு ஆண்டுகளாக வெளிவராமல் உள்ளது. ஏற்கனவே தனுஷ் நடிக்கும் படத்தை ராம்குமார் இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அந்த படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் படத்தை ராம்குமார் இயக்க இருப்பதாகவும் இந்த படம் ’ராட்சஸன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை விஷ்ணு விஷால் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுவதால் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.