close
Choose your channels

கையில் சிகரெட்டுடன் ஸ்டைலாக ராதிகா: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Monday, July 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ராதிகா சரத்குமார் கையில் சிகரெட்டுடன் ஸ்டைலாக உட்கார்ந்து இருக்கும் போஸ்டர் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த படத்திற்கு ’கொலை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தை பாலாஜி குமார் இயக்கி வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் கேரக்டரின் போஸ்டர்கள் கடந்த சில நாட்களாக வெளியாகிக் கொண்டிருக்கிறது

அந்த வகையில் ராதிகா சரத்குமார் கேரக்டர் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டரில் ராதிகா, ‘ரேகா’ என்ற கேரக்டரில் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கையில் சிகரெட்டுடன் ஸ்டைலாக ராதிகா உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இன்பினிட்டி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும் செல்வா படத்தொகுப்பும் செய்து வருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.