close
Choose your channels

இரட்டிப்பு மகிழ்ச்சியில் 'மொட்டசிவா கெட்டசிவா' படக்குழு

Monday, January 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான 'மொட்டசிவா கெட்டசிவா' திரைப்படம் பல தடைகளை கடந்து விரைவில் திரைக்கு வரவுள்ளதாக வெளிவந்த செய்தியினை நேற்று பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் குழுவினர்களுக்கு தற்போது இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது.

ஒன்று இந்த படம் இன்று சென்சார் செய்யப்பட்டு படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

இரண்டாவதாக இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. பெரும் வரவேற்பை பெற்ற இந்த டிரைலர் மூன்று நாட்களில் 17 லட்சம் பார்வையாளர்களை பெற்று இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. இதற்காக இந்த படத்தின் இயக்குனர் சாய்ரமணி ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் உள்ள 'மொட்டசிவா கெட்டசிவா' படக்குழுவினர் இந்த படத்தின் இசைவெளியீட்டை வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த படம் பிப்ரவரி 3வது வாரத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி, சத்யராஜ், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சாய் ரமணி இயக்கியுள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் என்பவர் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.