close
Choose your channels

'கருப்பு ராக்' ஆக மாறும் மொட்டை ராஜேந்திரன்

Saturday, December 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வில்லன் நடிகராக திரையுலகில் நுழைந்து தற்போது நகைச்சுவை வேடங்களில் வெளுத்து கட்டி வரும் 'மொட்டை' ராஜேந்திரன், விஜய், அஜித் படங்கள் உள்பட அனைத்து முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து பிசியான நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

இந்நிலையில் ஜெய் நடித்து வரும் 'எனக்கு வாய்த்த அடிமைகள்' படத்தில் அவருக்கு 'ராக்' வேடமாம். பிரபல WWF வீரரும், 'Fast and Furious' உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்தவருமான ராக்' பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. குறிப்பாக பெரும்பாலான குழந்தைகள் அவருடைய படங்களை ரசித்து பார்ப்பார்கள்.

இந்நிலையில் 'எனக்கு வாய்த்த அடிமைகள்' படத்தில் மொட்டை ராஜேந்திரன் 'ராக்' போன்ற கேரக்டரில் நடித்து வருகிறார். அவருடைய மேனரிசங்கள், அவருடைய ஸ்டைல், அவர் சண்டை போடும்போது அணியும் உடைகள் ஆகியவை கலந்த பாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்து வருவதாக இந்த படத்தின் மகேந்திரன் ராஜாமணி தெரிவித்துள்ளார். 'கருப்பு ராக்' என்பதுதான் இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரனின் கேரக்டராம். இந்த தகவலால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.