close
Choose your channels

ரஜினியின் 'தலைவர் 171' படத்தின் டைட்டில் இதுவா? கசிந்த புகைப்படம்..!

Sunday, April 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தலைவர் 171’ படத்தின் டைட்டில் நாளை வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் கசிந்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று படமாக்கப்பட்டதாகவும் அதனால் அந்த வீடியோவுடன் நாளை டைட்டில் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் நாளை இந்த படத்தின் டைட்டில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு ’ஈகிள்’ ‘கழுகு’ உட்பட சில டைட்டில்கள் வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்திற்கு ’தங்கம்’ அல்லது ’கோல்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தின் ப்ரோமோ ட்ரெய்லரை வெளியிட இருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’கோல்ட்’ அல்லது ’தங்கம் ’என்று வைக்கப்பட்டுள்ளதா? அல்லது வேறு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு கேங்ஸ்டர் ஆக நடித்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் அதே நேரத்தில் இந்த படம் ஒரு டைம் டிராவல் படமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்பட சிலர் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் என்பதும் அன்பறிவ் இந்த படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனரக்ளாக பணிபுரிய இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.