close
Choose your channels

பாஜக தலைவர்களை அடுத்து 'I.N.D.I.A' கூட்டணியின் முக்கிய தலைவரை சந்தித்த ரஜினிகாந்த்..!

Sunday, August 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலை ஆன்மீக பயணத்தை முடித்துவிட்டு சென்னை வரும் வழியில் பாஜக பிரமுகர்களை மட்டுமே சந்தித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று அவர் ‘I.N.D.I.A' கூட்டணியின் முக்கிய தலைவரை சந்தித்து பேசி உள்ளார்.

இமயமலையில் ஆன்மீக பயணத்தை சமீபத்தில் முடித்த ரஜினிகாந்த் ஜார்கண்ட் மாநிலத்தின் கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன், உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கவர்னர் ஆனந்திபென், உத்தரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போன்ற பிரபலங்களை சந்தித்தார்

ரஜினிகாந்த் பாஜக பிரமுகர்களை மட்டுமே சந்திப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று அவர் ‘I.N.D.I.A' கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் சமாதிவாதி கட்சியின் தலைவரும் உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ்வை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து ரஜினிகாந்த் கூறியபோது, ‘9 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவுடன் நட்பு ஏற்பட்டது, நாங்கள் செல்போனில் பேசிக்கொள்வோம், 5 ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு வந்தபோது அவர் இங்கு இல்லை, அதனால் இப்போது அவரை சந்தித்தேன்’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.