close
Choose your channels

'இரவின் நிழல்' படம் பார்த்து ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா? வைரல் புகைப்படம்!

Thursday, July 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பார்த்திபன் இயக்கி நடித்த ’இரவின் நிழல்’ என்ற உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு சமூக வலைதள விமர்சகர்கள் மற்றும் ஊடகங்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்ததை அடுத்து இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் தமிழ் திரை உலகில் நல்ல திரைப்படங்கள் வெளி வந்தால் அதை மனதார பாராட்டும் முதல் நபராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருப்பார் என்பதும் படக்குழுவினரை தனது வீட்டிற்கு வரவழைத்து வாழ்த்து தெரிவிப்பார் என்று தெரிந்தது.

அந்த வகையில் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் எடுத்துள்ள பார்த்திபனுக்கும் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: ’இரவின் நிழல்’ திரைப்படத்தை அசாத்திய முயற்சியுடன் ஒரே ஷாட்டில் முழுப்படத்தையும் எடுத்து அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்று, உலக சாதனை படைத்திருக்கும் நண்பர் பார்த்திபன் அவர்களுக்கும், அவரது அனைத்து படக்குழுவினருக்கும், மதிப்பிற்குரிய ஏஆர் ரஹ்மான் அவர்களுக்கும் முக்கியமாக படம்பிடித்த ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்., என்று கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.