close
Choose your channels

'குக்கூ' இயக்குனரின் 'ஜோக்கர்' சென்சார் தகவல்

Monday, July 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல எழுத்தாளர் ராஜூமுருகன் இயக்கிய 'குக்கூ' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் இயக்கிய இரண்டாவது படமான 'ஜோக்கர்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் இன்று இந்த படம் சென்சார் செய்யப்பட்டது.
'ஜோக்கர்' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'U' சர்டிபிகேட் அளித்துள்ளனர். எனவே இந்த படம் தமிழக அரசின் வரிவிலக்கு பெற தகுதி பெற்றுள்ளது. மேலும் சென்சார் பணிகள் முடிந்துவிட்டதால் மிக விரைவில் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.
குருசோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்ரி கிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சீன்ரோல்டான் இசையமைத்துள்ளார். ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் 'குக்கூ' படம் போலவே வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.