close
Choose your channels

ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

Saturday, December 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் 'அட்டக்கத்தி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய இரண்டு படங்களை அடுத்தடுத்து இயக்கியதால் பிரபல நடிகர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். இந்த நிலையில் அவர் தயாரித்த முதல் படமான 'பரியேறும் பெருமாள்' திரைப்படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ரஞ்சித் தற்போது பாலிவுட்டில் 'பிர்சா முண்டா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு எதிராக வீரச்சமர் புரிந்த பழங்குடி மரபின் கதாநாயகன் "பிர்சா முண்டா"வின் வாழ்க்கை வரலாற்றை கூறும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரடொக்சன்ஸ் தயாரிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் இன்று மாலை 6 மணிக்கு வெளிவரவுள்ளது. இந்த தகவலை ரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இந்த படமும் 'பரியேறும் பெருமாள்' போன்ற ஜாதி பிரச்சனையை கூறும் படமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.