close
Choose your channels

'ரோஜா' மதுபாலாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? வைரல் புகைப்படங்கள்!

Sunday, February 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கே பாலச்சந்தர் இயக்கிய ’அழகன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி மணிரத்னம் இயக்கிய ’ரோஜா’ என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை மதுபாலாவின் மகள்கள் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் கடந்த 1990களில் முன்னணி நடிகைகளாக இருந்தவர்களில் ஒருவர் மதுபாலா. இவர் கடந்த 1999ஆம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இவருக்கு அமையா, கெயா ஆகிய 2 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆனந்த் ஷா சமீபத்தில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மதுபாலா வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் மதுபாலாவின் 2 மகள்கள் உள்ளனர். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகை மதுபாலாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா ?என்று ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்

கடந்த ஆண்டு வெளியான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான தலைவி’ திரைப்படத்தில் ஜானகி ராமச்சந்திரன் கேரக்டரில் நடிகை மதுபாலா நடித்திருந்தார் என்பதும், தற்போது அவர் நான்கு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.