close
Choose your channels

பிறந்த நாளில் கணவருடன் ரொமான்ஸ்.. 'ரோஜா' சீரியல் நடிகை பிரியங்காவின் க்யூட் புகைப்படங்கள்..!

Sunday, April 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவியில் ஒளிபரப்பான ‘ரோஜா’ என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக இந்த சீரியலில் நாயகி ஆக நடித்த பிரியங்காவுக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் மலேசியாவில் உள்ள முருகன் கோவிலில் நடிகை ரோஜா தொழிலதிபர் ராகுல் வர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்கள் மலேசிய முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகின.

இந்த நிலையில் ‘ரோஜா’ சீரியல் நடிகை பிரியங்கா தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். பிறந்தநாள் கொண்டாட மீண்டும் மலேசியாவுக்கு கணவருடன் மலேசியா சென்றுள்ள பிரியங்கா அங்கு அவருடன் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்தப் புகைப்படங்கள் கியூட்டாக உள்ளது.

மேலும் பிரியங்கா பிறந்த நாளில் அவருடைய கணவர் அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்ததையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து உள்ளார். இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.