close
Choose your channels

'ரஷ் ஹவர்' படத்தின் அடுத்த பாகம்: ஜாக்கி சான் பிறந்த நாளில் வெளியான தகவல்

Monday, April 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர்களான ஜாக்கி சான் மற்றும் கிற்ஸ் டக்கர் நடித்த 'ரஷ் ஹவர்' திரைப்படத்தின் மூன்று பாகங்களும் உலகம் முழுவதும் சூப்பர்ஹிட்டான நிலையில் விரைவில் இந்த படத்தின் அடுத்த பாகம் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஹாலிவுட்டில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த பாகங்களில் படங்கள் தயாரிப்பது வழக்கமான ஒன்றே. அந்த வகையில் நேற்று ஜாக்கிசானின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த கிறிஸ் டக்கர், விரைவில் 'ரஷ் ஹவர் படத்தின் நான்காம் பாகம் உருவாகும் என்று கூறியுள்ளார்.

கடந்த 1998ஆம் ஆண்டு 'ரஷ் ஹவர்' படத்தின் முதல் பாகமும், 2001ஆம் ஆண்டு இரண்டாம் பாகமும், 2007ஆம் ஆண்டு மூன்றாம் பாகமும் வெளிவந்தது. மூன்றாம் பாகம் வெளிவந்து 12 ஆண்டுகள் கழித்து அதன் நான்காம் பாகத்தின் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.