close
Choose your channels

சாய்பல்லவி படத்தின் டைட்டில் திடீர் மாற்றம்: ரிலீஸ் தேதியும் அறிவிப்பு

Saturday, April 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான மலையாள படமான 'பிரேமம்' படம் மூலம் கேரளாவில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் நடிகை சாய்பல்லவி. இந்த படத்தின்  வெற்றியால் சாய்பல்லவி தனது டாக்டர் தொழிலை கூட கைவிட்டு முழுநேர நடிகையாகிவிட்டார் என்பதும் தெரிந்ததே. 

இந்த நிலையில் சாய்பல்லவி நடித்த முதல் தமிழ்ப்படமான 'கரு' திரைப்படத்தின் டைட்டில் தற்போது மாற்றப்பட்டுள்ளது. இந்த படத்தின் புதிய டைட்டில் 'தியா' என்பது ஆகும். மேலும் இந்த படம் வரும் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஏப்ரல் 27ஆம் தேதி அரவிந்தசாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' மற்றும் விக்ரம் பிரபுவின் 'பக்கா' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

இயக்கிய விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில் சாய்பல்லவி, நாகசெளரியா, ஆர்ஜே பாலாஜி, சந்தானபாரதி, ரேகா, நிழல்கள் ரவி உள்பட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள  இந்த படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.