close
Choose your channels

மீண்டும் 'தி ஃபேமிலிமேன் 2' இயக்குனருடன் இணையும் சமந்தா: ஹீரோ இந்த பிரபலமா?

Friday, December 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமந்தா நடித்த ‘தி ஃபேமிலிமேன் 2’ என்ற வெப்தொடர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற நிலையில் மீண்டும் அந்த தொடரின் இயக்குனருடன் சமந்தா இணைந்து உள்ளதாகவும், இந்த தொடரில் பிரபல ஹீரோ ஒருவரும் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாகிய ‘தி ஃபேமிலிமேன் 2’ என்ற வெப்தொடர் அமேசான் ஓடிடியில் கடந்த ஜூன் மாதம் வெளியானது என்பது இந்த தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா, பிரியாமணி, மனோஜ் பாஜ்பாய் உள்பட பலர் நடித்த இந்தத் தொடருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தற்போது மீண்டும் ராஜ் & டிகே இயக்கும் தொடரில் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமேசான் ஓடிடிக்காக உருவாக்கப்படும் இந்த த்ரில் மற்றும் ஆக்சன் வெப்தொடரில் நாயகனாக பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தொடரின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதாகவும் அடுத்த ஆண்டு இறுதியில் அமேசான் ஓடிடியில் இந்த தொடர் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.