close
Choose your channels

'ஓ பேபி' இயக்குனரின் அடுத்த படத்திலும் சமந்தா?

Tuesday, July 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான சமந்தாவின் 'ஓபேபி' திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது

இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் மட்டுமின்றி கடந்த இரண்டு வார வசூலும் திருப்திகரமாக இருப்பதாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து சமந்தாவின் மற்றொரு வெற்றிப்படமாக 'ஓபேபி' திரைப்படம் அமைந்துள்ளது

இந்த நிலையில் 'ஓபேபி' திரைப்படம் உருவாகி கொண்டிருக்கும்போதே இயக்குனர் நந்தினி ரெட்டி சமந்தாவிடம் ஒரு கதையைக் கூறி அந்தக் கதையிலும் நடிக்க ஒப்புதல் வாங்கி இருந்தார். தற்போது 'ஓபேபி' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் நந்தினி ரெட்டியின் அடுத்த படத்திலும் சமந்தா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்த படத்திலும் சமந்தாவுக்கு வித்தியாசமான கேரக்டர் என்று கூறப்படுகிறது

இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வு தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.