close
Choose your channels

நூறு முறை விழுந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே: சமந்தாவின் வீடியோ வைரல்

Friday, January 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவது உள்பட பல்வேறு புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பனிச்சறுக்கு பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை சற்றுமுன் சமந்தா வெளியிட்டுள்ளார். அதில் சமந்தா கீழே விழும் காட்சியும் உள்ளது. இதுகுறித்து அவர் கூறியபோது, ‘நான் குழந்தைகளுடன் பனிச்சறுக்கு பயணத்தை தொடங்கினேன், நூறு முறை விழுந்தாலும் எனக்கு இந்த அனுபவம் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த அனுபவத்தை உற்சாகமாகவும் அச்சுறுத்தலாகவும் மாற்றிய எனது பயிற்சியாளருக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பனிச்சறுக்கில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் பல இடங்களில் வீழ்ச்சி அடைந்தாலும், அதையும் தாண்டி அவர் முன்னேறி கொண்டிருப்பதையே அவர் மறைமுகமாக பனிச்சறுக்கு விளையாட்டுடன் தொடர்புபடுத்தி பதிவு செய்துள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்துவருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.