close
Choose your channels

சமந்தா படத்திற்காக போடப்பட்ட 7 ஸ்டார் ஹோட்டல் செட்: வைரல் வீடியோ

Sunday, February 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பான் - இந்தியா திரைப்படமாக உருவாகிவரும் சமந்தாவின் படத்திற்காக போடப்பட்டுள்ள 7 ஸ்டார் ஹோட்டல் செட் குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படம் ’யசோதா’. ஹரி சங்கர் மற்றும் ஹரீஷ் நாராயணன் ஆகியோர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சமந்தா, உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார், சம்பத்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மணிஷர்மா இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக ரூபாய் 3 கோடி செலவில் 7 ஸ்டார் ஹோட்டல் போன்ற செட் சமீபத்தில் அமைக்கப்பட்டது. இந்த செட் அமைக்கும் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவை பார்ப்பதற்கே த்ரில்லாங்க உள்ளது.

இந்த படத்தின் பெரும்பாலான பகுதிகள் இந்த செட்டில் தான் படமாக்கப்பட உள்ளதாகவும், த்ரில் கதையம்சம் கொண்ட இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஆகிய ஐந்து மொழிகளில் உருவாக இருக்கும் பான் - இந்தியா திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

`

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.