அறிமுக இயக்குனருக்கு ஆதரவு கொடுத்த விஜய் மனைவி: வைரலாகும் புகைப்படம்
நடிகை வரலட்சுமி இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் என்றும் அவர் இயக்கும் முதல் திரைப்படத்தின் டைட்டில் ’கண்ணாமூச்சி’ என்றும் இந்தத் திரைப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதாகவும் வெளிவந்தத செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் நடிகையில் இருந்து இயக்குனராக புரமோஷன் பெற்றுள்ள வரலட்சுமிக்கு சுஹாசினி, ஹன்சிகா, சாயிஷா, ரம்யா, ரம்யா நம்பீசன், சமந்தா, லட்சுமி மஞ்சு, அபிராமி, சிம்ரன், ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், டாப்சி, தமன்னா உள்பட பல நடிகைகள் வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது தளபதி விஜய்யின் மனைவி சங்கீதாவும் வாழ்த்து தெரிவித்து உள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பாளரான ஹேமா ருக்மணி தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகை வரலட்சுமி இயக்குனராக மாறியதற்கு வாழ்த்து தெரிவித்த தளபதியின் மனைவி சங்கீதா விஜய்க்கு நன்றி என தெரிவித்துள்ளார். இதேபோல் வரலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்த ஜோதிகாவுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
பொதுவாக விஜய் நடிக்கும் படங்கள் குறித்து கூட கருத்து சொல்லாத சங்கீதா விஜய், முதல் முறையாக நடிகை வரலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது கோலிவுட் திரையுலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது