close
Choose your channels

பழிவாங்குறதுன்னா என்னன்னு தெரியுமா? 'சாணிக்காகிதம்' டீசர் மற்றும் ரிலீஸ் தேதி!

Friday, April 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ‘சாணிக்காகிதம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகப் போவதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படம் மே 6ஆம் தேதி அமேசான் ஓடிடியில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது

இந்த டீசரில் கீர்த்தி சுரேஷின் ஆழமான அழுத்தமான வசனங்கள் இருப்பதை அடுத்து டீசர் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ‘பழிவாங்குவது என்றால் என்னவென்று தெரியுமா? ஒருத்தன் நம்மை கல்லால் அடித்தால், அவனை திருப்பி அடிக்க வேண்டும், ஒருத்தன் நம்மேல் எச்சில் துப்பினால் அவன் மேல் திருப்பி துப்ப வேண்டும். ஆனால் ஒருத்தன் நம்முடைய வாழ்க்கையை அழித்து விட்டால் நமது உயிர், உலகம், ஆசை அனைத்தும் அழிந்துவிடும். அவனை தூக்கி ஜெயிலில் போட்டால், அதற்கு பெயர் பழிவாங்குவதா? என்ற ஆவேசமான கீர்த்தி சுரேஷ் பேசும் வசனம் இந்த டீசரில் உள்ளது. இந்த டீசரை பார்க்கும்போதே படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையமைப்பில் யாமினி யாக்னாமூர்த்தி ஒளிப்பதிவில் நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.