close
Choose your channels

நடிப்பில் இனி சாதிக்க உங்களுக்கு எதுவும் மிச்சமில்லை: கமலுக்கு வாழ்த்து கூறிய சீனியர் நடிகர்..!

Monday, November 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிப்பில் இனி சாதிக்க உங்களுக்கு எதுவும் மிச்சம் இருப்பதாக தெரியவில்லை என சீனியர் நடிகர் ஒருவர் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசன் நாளை பிறந்தநாள் கொண்டாட இருக்கும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரை உலகை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கமலஹாசனுக்கு சீனியர் நடிகரும் சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தையுமான சிவக்குமார் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நடிப்பு கலையில் அசகாய சூரர்கள் என்று நாம் மதித்து போற்றுபவர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியும், உலகநாயகன் கமலும் தான். அவர்கள் செய்த வெரைட்டி ரோல்களை இதுவரை வேறு யாராலும் செய்ய முடியவில்லை.

எட்டு படங்களில் நாம் சேர்ந்து நடித்தோம். வில்லன் வேடங்களில் நடித்து ஹீரோவாக உயர்ந்த முதல் ஹீரோ நீங்கள்தான். நடிப்பில் இனி சாதிக்க உங்களுக்கு எதுவும் மிச்சம் இருப்பதாக தெரியவில்லை. அரசியல் களம் உங்களுக்காக காத்திருக்கிறது. நீங்கள் திரையில் சாதித்ததை அரசியலிலும் சாதிக்க முடியும் என்று துணிந்து இறங்குங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.