close
Choose your channels

புதிய வீட்டில் பக்காவாக பார் வைத்துள்ள சீரியல் நடிகை.. வாழ்த்து கூறும் ரசிகர்கள்!

Tuesday, October 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல சீரியல் நடிகை தான் கட்டிய புதிய வீட்டில் பார் செட்டப் வைத்துள்ளதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் நடிகைகளில் ஒருவர் பிரியா பிரின்ஸ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ’இஎம்ஐ தவணை வாழ்க்கை’ என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் பல சீரியல்களில் நடித்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கண்ணான கண்ணே’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். மேலும் இவர் ’பசங்க’ ’வானவராயன் வல்லவராயன்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை பிரியா பிரின்ஸ் சமீபத்தில் தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்துள்ளார் என்பதும் இவருக்கு 16 வயதில் மகள் இருக்கிறார் என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நீண்ட நாட்களாக சென்னையில் ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்ற கனவில் இருந்த பிரியா பிரின்ஸ் தற்போது அதை நனவாக்கி உள்ளார். தான் கட்டிய புதிய வீட்டை யூடியூபில் வீடியோவாக வெளியிட்டு உள்ள பிரியா பிரின்ஸ் அந்த வீட்டில் பக்காவாக பார் செட்டப் வைத்திருப்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் வீட்டிலேயே பார் வைத்துள்ள பிரியா பிரின்ஸ்க்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.