close
Choose your channels

'சர்வர் சுந்தரம்' ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம்: அதிருப்தியில் ரசிகர்கள்

Wednesday, February 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சந்தானம் நடித்த ’டகால்டி’ திரைப்படம் கடந்த 31ஆம் தேதி வெளியான நிலையில் அதே தேதியில் சந்தானம் நடித்த ’சர்வர் சுந்தரம்’ என்ற திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஒரே நாளில் இரண்டு சந்தானம் படம் ரிலீஸா? என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் காத்திருந்த நிலையில் ரிலீஸ் தேதி நெருங்கிய நிலையில் திடீரென சர்வர் சுந்தரம் திரைப்படம் போட்டியில் இருந்து விலகி பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 21ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு புதிய தேதியுடன் கூடிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இந்த படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில் தேதிகள் மாற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு முறை மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படக்குழுவினர் உறுதியான ஒரு தேதியை செய்து அறிவிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக வைபவி சாந்தில்யா என்பவர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கிரண் ரத்தோட், ராதாரவி, மயில்சாமி, சினேகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.