close
Choose your channels

இரண்டே நாளில் விஜய்யின் குட்டிக்கதை ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்!

Wednesday, February 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் ஒரு குட்டிக் கதையை கூறுவார் என்பது அனைவரும் அறிந்ததே. பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் கூறிய குட்டி கதை பல நாட்களுக்கு சமூக வலைதளங்களில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விரைவில் நடைபெற இருக்கும் ’மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் கூறவிருக்கும் குட்டிக் கதையை கேட்க அனைவரும் ஆவலுடன் உள்ளனர். குறிப்பாக இந்த குட்டிக்கதை வருமான வரி சோதனை மற்றும் ஒரு சிலர் நடத்திய போராட்டம் குறித்து இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளிவரும் என்றும் ’நாம ஆட்டத்தை ஆரம்பித்து விடலாமா” என்றும் நேற்று படக்குழுவினர்களிடமிருந்து அறிவிப்பு வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதனை அடுத்து சில மணி நேரங்களிலேயே ’மாஸ்டர்’ படத்தின் அப்டேட் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ’ஒரு குட்டி கதை’ என்ற பாடல் வரும் 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இசை வெளியீட்டு விழாவில் விஜய் கூறும் குட்டிக்கதைக்கு முன்னதாகவே இந்த படத்தின் குட்டிக்கதை பாடல் வெளியாக உள்ளது. அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடலை கேட்க அனைவரும் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.