close
Choose your channels

’பிகில்’ படத்தின் ‘அந்த 7 நிமிடம்’: ஆச்சரியப்பட வைக்கும் தகவல்

Saturday, October 19, 2019 • தமிழ் Comments

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக பெருவாரியான திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். இந்த நிலையில் வரும் திங்கள் முதல் இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இந்த படத்திற்கு சென்சார் ’யுஏ சான்றிதழ் அளித்துள்ளது என்பதையும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 179 நிமிடங்கள் என்பதையும் ஏற்கனவே நாம் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தின் உண்மையான ரன்னிங் டைம் 172 நிமிடங்கள் மட்டுமே என்றும், கடைசி ஏழு நிமிடங்கள் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ திரையிடபடுவதாகவும் செய்திகள் வந்துள்ளது.

சுமார் 180 கோடியில் பட்ஜெட்டில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் உருவான இந்த படத்தில் படக்குழுவினர்களின் உழைப்பின் மதிப்பை வெளிக்காட்டும் வகையில் இந்த ஏழு நிமிட மேக்கிங் வீடியோ அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த 7 நிமிடத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது என்றும் படக்குழுவினர்கள் தரப்பில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz