close
Choose your channels

அக்கா திருமணத்தின் ஹல்தி கொண்டாட்டம்.. மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய அதிதி ஷங்கர்..!

Wednesday, April 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த திருமணத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் மணமகள் ஐஸ்வர்யாவின் சகோதரி நடிகை அதிதி ஷங்கர் தனது அக்காவின் திருமணத்தில் போது நடந்த ஹல்தி கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இதில் ஷங்கரின் குடும்பத்தினர் முழுவதும் மஞ்சள் உடையில் இருப்பது போன்ற காட்சியும் குறிப்பாக அதிதி சங்கர் மஞ்சக்காட்டு மைனாவாகவே மாறி உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோ உள்ளது. இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் சுமார் 2 லட்சம் லைக்ஸ்களும் நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது என்பதும் அடுத்தது உங்களுக்கு எப்போது திருமணம்? என்ற கேள்வியை கமெண்ட்ஸ் பகுதியில் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் அதிதி ஷங்கர் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்துவரும் நிலையில் இன்னும் இரண்டு படங்களில் நடிக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.