close
Choose your channels

ரஷ்ய தொழிலதிபருடன் ரஜினி-விஜய் நாயகிக்கு திருமணம்

Tuesday, February 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தென்னிந்திய நடிகையும், ரஜினி, விஜய், தனுஷ் உள்பட முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்டவருமான நடிகை ஸ்ரேயாவுக்கு வரும் மார்ச் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. அவருக்கு நமது அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள்

ரஜினியுடன் 'சிவாஜி', விஜய்யுடன் 'அழகிய தமிழ்மகன்', தனுஷுடன் 'திருவிளையாடல் ஆரம்பம்' போன்ற படங்களில் நடித்தவர் ஸ்ரேயாசரண். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் பாலிவுட்டிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ஸ்ரேயாவுக்கும் ரஷ்ய தொழிலதிபர் மற்றும் விளையாட்டு வீரரான Andrei Koscheev அவர்களுக்கும் வரும் மார்ச் 17, 18 மற்றும் 19 ஆகிய மூன்று நாட்கள் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. ஸ்ரேயாவின் திருமண செய்தி வந்ததை அடுத்து அவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.