close
Choose your channels

'விக்ரம்' அடுத்த படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன்

Monday, April 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன், விக்ரம் நடித்துள்ள அடுத்த படத்தில் இணைந்துள்ள செய்தி வெளியாகியுள்ளது

கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம், அக்சராஹாசன் நடிப்பில் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கடாரம் கொண்டான். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் மே 1ஆம் தேதி வெளியாகவுள்ளது

இந்த நிலையில் இந்த பாடலை நடிகை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். இதனை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் உறுதி செய்துள்ளார். ஜிப்ரானின் இசையில் இந்த பாடலை தான் பாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன் ஆகிய மூவரும் பணிபுரிந்த 'சபாஷ் நாயுடு' படம் என்ன ஆனது என்ற தகவலே தெரியாமல் இருந்து வரும் நிலையில் தற்போது 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தில் அதே மூவர் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.