close
Choose your channels

சிபிராஜின் 'மாயோன்' ரிலீஸ் தேதி இதுவா? வெளியான சூப்பர் தகவல்

Wednesday, November 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிபிராஜ் நடித்த ‘மாயோன்’ என்ற திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் கிஷோர் இயக்கத்தில் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாயோன்’. இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது என்பதும் அதுமட்டுமின்றி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேக டீசர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டீசர் ரிலீஸூக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.