close
Choose your channels

ஹன்சிகாவுடன் மீண்டும் இணையும் சிம்பு 

Tuesday, March 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்த 'வாலு' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் இருவரும் இணைந்து 'வேட்டை மன்னன் என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் எதிர்பாராமல் அந்த படம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஹன்சிகா நடித்து வரும் 50ஆவது படமான 'மஹா' என்ற படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

சிம்பு, ஹன்சிகா தோன்றும் காட்சிகள் இந்த படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளாக வரவிருப்பதாகவும், இந்த படத்தில் சிம்பு 'சோஹிப்' என்ற கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிம்பு, ஹன்சிகா காட்சிகள் இஸ்தான்புல் பகுதியில் படமாக்க படக்குழுவினர் திடடமிட்டுள்ளனர்.

அறிமுக இயக்குனர் ஜமீல் இயக்கி வரும் இந்த படத்தில் ஹன்சிகா, ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, நாசர், கருணாகரன், உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.