close
Choose your channels

இந்த வாரம் ஒரே ஒரு தமிழ்ப்படம் தான்.. ஆனாலும் சூப்பர் படம்: ஓடிடி ரிலீஸ் தகவல்..!

Thursday, February 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் அந்த படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இந்த வாரம் ஓடிடியிலும் ஒரே ஒரு தமிழ் படம் வெளியாகிறது என்றாலும் சூப்பர்ஹிட் படம் என்பதால் ஓடிடி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் உருவான ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் இந்த வாரம் அமேசான் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அதே ஜனவரி 25ஆம் தேதி வெளியான மோகன்லாலின் ’மலைக்கோட்டை வாலிபன்’ என்ற திரைப்படமும் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. மேலும் பிரியாமணி நடித்த ’பாமகல்பம்’ என்ற தெலுங்கு திரைப்படம் இந்த வாரம் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ’ஸ்கூல் டேஸ்’ என்ற கன்னட திரைப்படம் நம்ம பிளிக்ஸ் என்ற ஓடிடியில், ’போச்சர்’ என்ற இந்தி படம் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.