close
Choose your channels

டைம் கிடைச்சா 'மஞ்சும்மள் பாய்ஸ்' படத்தை பாருங்க.. 'சிறகடிக்க ஆசை' நடிகர் பரிந்துரை..!

Sunday, March 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் நடித்து வரும் நடிகர் ’டைம் கிடைத்தால் எல்லோரும் மலையாள படமான ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ படத்தை பாருங்கள்’ என்று தனது சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ என்ற திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் 50 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது. கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்தில் தமிழ் படத்தை விட அதிகமாக வசூல் செய்து வருகிறது என்பதும் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

குறிப்பாக கமல்ஹாசன் நடித்த ’குணா’ படத்தின் கதைக்களம் மற்றும் லொகேஷன் என்பதால் இந்த படம் ’குணா’ படத்தை மீண்டும் ஞாபகப்படுத்துகிறது என்று படம் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஏற்கனவே பல திரை உலக மற்றும் சின்னத்திரை உலக பிரபலங்கள் ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ படத்தை பார்த்து பாராட்டிய நிலையில் தற்போது ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் கதாநாயகன் முத்துவின் நண்பரான செல்வம் என்ற கேரக்டரில் நடித்துள்ள பழனியப்பன் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

நாள் கழித்து தியேட்டரில் ‘மஞ்சும்மள் பாய்ஸ்’என்ற படத்தை பார்த்தேன், மிகவும் அருமையாக இருந்தது, கொடைக்கானலை மிகவும் அற்புதமாக காட்டியிருக்கின்றனர். இந்த படத்திற்கு தமிழ் படத்தை விட அதிகமாக கூட்டம் வந்ததை பார்த்து நான் ஆச்சரியம் அடைந்தேன். எனவே நேரம் கிடைத்தால் இந்த படத்தை தயவு செய்து சென்று பாருங்கள், மனதிற்கு மிகவும் திருப்தியாக இருக்கும்’ என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.