close
Choose your channels

'மாவீரன்' படத்தின் சூப்பர் அப்டேட்.. என்ன சொல்கிறார் இயக்குனர் மடோன் அஸ்வின்..!

Wednesday, April 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட்டை இயக்குனர் மடோன் அஸ்வின் தெரிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தேசிய விருது பெற்ற ’மண்டேலா’ என்ற திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’மாவீரன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக இயக்குனர் மடோன் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்றும் இன்னும் ஏழு நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் எடிட்டிங் பணிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றன என்றும் டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் நடைபெற்று வருகிறது என்றும் இயக்குனர் மடோன் தெரிவித்துள்ளார்

இதுவரை எடுக்கப்பட்ட படத்தை பார்த்ததில் தனக்கும் தனது படக்குழுவினர்களுக்கும் மிகவும் திருப்தியாக இருந்தது என்றும் ஒட்டு மொத்த படக்குழுவும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை அமேசான் நிறுவனம் மிகப் பெரிய விலை கொடுத்து வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வரும் இந்த படத்தில் மிஷ்கின், சுனில் ஆகிய இருவரும் வில்லன்களாக நடித்து வருகின்றனர். மேலும் நடிகை சரிதா ஒரு முக்கிய குணச்சித்திர கேரக்டரில் நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.