close
Choose your channels

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. மிரள வைக்கும் மேக்கிங் வீடியோ..!

Saturday, April 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில், தேசிய விருது பெற்ற ’மண்டேலா’ என்ற திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வந்த ’மாவீரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘மாவீரன்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 11 என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு உள்ள நிலையில் இந்த வீடியோவில் உள்ள காட்சிகளை பார்க்கும்போது மிரள வைக்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் திரையுலக வாழ்வில் இந்த படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ள இந்த படத்தில் மிஷ்கின், யோகி பாபு, சுனில் உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் நடிகை சரிதா ஒரு முக்கிய குணச்சித்திர கேரக்டரில் நடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.